தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ட்ரம்ப் வருகை - அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்! - டிரம்ப் வருகை

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்திய வருகைக்கு எதிராக சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

embassy
embassy

By

Published : Feb 24, 2020, 3:42 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தார். அவரைப் பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையம் சென்று வரவேற்றார். நாளை மோடியும், ட்ரம்பும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ட்ரம்பிற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் அவர்களைத் தடுத்துநிறுத்தி கைதுசெய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

டிரம்ப் வருகை - அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்!

இதையும் படிங்க: பெரிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது! - பிரதமர் மோடி பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details