சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டங்களுக்கு எதிராக ஐந்தாவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டபேரவையில் தீர்மான நிறைவேற்றப்படும் என நினைத்தோம். ஆனால், நேற்று எங்களை வேதனைப்படுத்தும் வகையில் சட்டசபையில் பேசியிருப்பது வேதனையளிக்கிறது. நாங்கள் அமைதியாக தான் போராடி வருகிறோம். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்' எனத் தெரிவித்துள்ளனர்.