தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அம்பானியின் ரிலையன்ஸ் பொருட்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் ! - புதிய வேளாண் சட்டம் 2020

அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ பொருட்களை புறக்கணித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

protest
protest

By

Published : Dec 14, 2020, 8:22 PM IST

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விலைவாசி உயர்வை எதிர்த்து, புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டை ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் துணிக்கடை அருகே கட்சியினர் ஒன்று திரண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இக்கூட்டத்தில், புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளின் உயிரை பாதுகாத்திட வேண்டும், அம்பானி, அதானியின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், மத்திய அரசு உடனடியாக அனைத்தையும் செய்திட வேண்டும், விலைவாசி குறைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் எம் சௌந்தரராஜன் லோகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்பு செழியன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தந்தை, மகன் தீ விபத்தில் உயிரிழப்பு - தற்கொலையா என போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details