தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேளாண் சட்டங்களை ரத்து செய்க - அண்ணா சாலையில் திடீர் சாலை மறியல்!

வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து பலர் சென்னை அண்ணா சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணா சாலையில் திடீர் சாலை மறியல்
அண்ணா சாலையில் திடீர் சாலை மறியல்

By

Published : Feb 6, 2021, 6:27 PM IST

சென்னை: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் 70 நாள்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அதற்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். இச்சூழலில், இன்று சென்னை நகரின் முக்கிய சாலையான, அண்ணா சாலையில் பி.ஆர்.பாண்டியன், தமிமுன் அன்சாரி தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அண்ணா சாலையில் திடீர் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, "மத்திய அரசு உடனடியாகவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்யாமல் அமைதியான முறையில் போராட அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details