தர்மபுரி: சோமனஅள்ளி அடுத்த பங்குநத்தம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிபி ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய 400க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் மற்றும் மேடான பகுதிகள் மக்கள் வாழ்ந்த பெருங்கற்கால நினைவுச் சின்னங்களாக காணப்படுகின்றன.
இப்பகுதியை நினைவுச்சின்னமாக அமைக்க வேண்டும் என தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஷ்வரன் தமிழ்நாட்டு முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.