தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

PROJECT TIGER: புலிகளைப் பாதுகாக்க ரூ. 2.12 கோடி ஒதுக்கீடு

புலிகளைப் பாதுகாக்கும் 'PROJECT TIGER' திட்டத்திற்கு முதல் தவணையாக ரூ. 2.12 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

PROJECT TIGER
PROJECT TIGER

By

Published : Dec 27, 2021, 12:25 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் புலிகளைப் பாதுகாக்கவும், அழியும் நிலையில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முதல் தவணை நிதியாக 2.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் புலிகளைப் பாதுகாக்கும் Project tiger திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் நிதியுடன் மாநில அரசின் நிதியைச் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள புலிகள் சரணாலயத்தினைப் பாதுகாக்கவும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயம், மேகமலை சரணாலயம் உள்ளிட்டவற்றிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு முதல்கட்டமாக 1.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

மீதமுள்ள தொகை பணிகளைப் பார்வையிட்ட பின் ஒதுக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசின் பங்குத் தொகையை ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, இதற்கான உத்தரவினைச் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: உனக்காக என்னை பாதுகாக்கத்தான் வேண்டும் மனிதா! - இப்படிக்கு புலிகள்

ABOUT THE AUTHOR

...view details