தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டாலின் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய பாஜக நிர்வாகிகளை கைது செய்ய தடை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் விசாரணை முடியும் வரை பாஜக நிர்வாகிகளை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலின் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய பாஜக நிர்வாகிகளை கைது செய்ய தடை
ஸ்டாலின் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய பாஜக நிர்வாகிகளை கைது செய்ய தடை

By

Published : Sep 24, 2022, 11:55 AM IST

சென்னை: வடசென்னையில் கடந்த 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி திமுக கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அதிகமாக மணல் ஏற்றிச்செல்லப்பட்ட லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details