தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
கோயில்களில் வழிபாட்டிற்கு தடை - அமைச்சர் சேகர் பாபு தகவல் - கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு
அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று (ஆகஸ்ட் 08), ஆடி பூரமான (ஆகஸ்ட் 11) புதன்கிழமை ஆகிய நாள்களில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இந்நாள்களில் ஆகம விதிப்படி பூசைகள் நடைபெறுமெனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பக்தர்களின்றி நடைபெற்ற காந்திமதி அம்பாள் வளைகாப்பு நிகழ்ச்சி