இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்வத்தை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்துள்ளார். இவர் பதவியேற்றதிலிருந்து மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
பேராசிரியர் செல்வம் 36 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆராய்ச்சியில் 12 தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் சர்வதேச கருத்தரங்கில் 4 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். தேசிய அளவிலான கருத்தரங்கில் 341 ஆராய்ச்சி கட்டுரைகளையும், சர்வதேச அளவில் 16 கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார்.