தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முத்து - தயாரிப்பாளர் தாணு புகழாரம்! - தயாரிப்பாளர் தாணு புகழாரம்

நடிகர் ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த முத்து என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு புகழாரம் சூட்டியுள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் நடித்த "செல்ஃபி" திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் இதனை தெரிவித்தார்.

producer-thanu
producer-thanu

By

Published : Apr 26, 2022, 10:42 PM IST

சென்னை: மதிமாறன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ்குமார் நடித்த "செல்ஃபி" திரைப்படத்தின் வெற்றி விழா இன்று(26.4.2022) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் மதிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஜிவி.பிரகாஷ்குமார், நடிகை வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

"செல்ஃபி" திரைப்படத்தின் வெற்றி விழா

விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ், "தயாரிப்பாளர் தாணுவுக்கும், இயக்குநர் மதிமாறனுக்கும் நன்றி. இது சிறிய முதலீட்டு படமாக இருந்தாலும், லாபகரமான படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. இனிவரும் படங்களில் இன்னும் சிறப்பாக நடிக்க முயற்சி செய்கிறேன்" என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, "மதிமாறனை என்னிடம் அனுப்பிய வெற்றிமாறனுக்கு நன்றி. திறமையான இயக்குநரை என்னிடம் கொடுத்துள்ளார். குறைந்த நாட்களில் இப்படத்தை எடுத்து முடித்துவிட்டார். ஜிவி. பிரகாஷ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த முத்து. இரக்க குணமும், பணம் எதிர்பார்க்காத பண்பும் கொண்டவர். அவர் நடித்த படங்களிலேயே சிறந்த படம் இது. இப்படம் நிச்சயம் விருதுகள் குவிக்கும். குணாநிதி, கௌதம் மேனன் நடிப்பும் அருமை. இயக்குநர் மதிமாறனுக்கு எனது தயாரிப்பில் படம் இயக்க ரூ.10 லட்சத்தை அளிக்கிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோம் சென்ற மாளவிகா மோகனன்!

ABOUT THE AUTHOR

...view details