சென்னை: மாநகராட்சி கட்டுப்பாட்டில் 281 பள்ளிகள் இயங்கி வருகிறது. தற்போது அதில் சீரமிகு நகரத்திட்ட நிதியின் கீழ் சென்னை பள்ளிகளுக்கு 9.8 கோடி மதிப்பீட்டில் மாணவ மாணவியர்களுக்கான நவீன மேசைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
சென்னையில் உள்ள 108 மாநகராட்சி பள்ளிகளுக்கு 10,279 மேசைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதுவரை 1,291 நவீன மேசைகள் கொள்முதல் செய்யப்பட்டு மாநகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.1 முதல் 12 வகுப்பு வரை வகுப்புகளுக்கு ஏற்றார் மேசைகளின் அளவு அமைக்கப்பட்டுள்ளது.