தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னைவாசிகளுக்கு நற்செய்தி- குடிநீர், கழிவு நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு - நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம்

குடிநீர் மற்றும் கழிவுநீரில் இனி பிரச்சனை இருந்தால் படம் எடுத்து மெட்ரோ வாட்டர் (Metro Water) என்ற செயலியில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் தேவை
குடிநீர் தேவை

By

Published : Apr 7, 2022, 6:43 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.7) இரண்டாவது நாளாக துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், சென்னை மாவட்டத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றலில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க பொது மக்களின் வசதிகாக Metro Water என்ற (App) செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதில் கழிவு நீர் வீட்டு வாசலில் தேங்கியிருந்தாலும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்தாலோ உடனடியாக செல்போனில் படம் எடுத்து செயலில் பதிவேற்றம் செய்தால் அதற்கென புகார் பதிவு எண் (SMS) குறுஞ்செய்தி வரும் அதை பொது மக்கள் வைத்துகொண்டு தங்களின் புகார் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று பின் தொடர்ந்தும் பார்க்கலாம் என கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.

சென்னையின் பெரும்பாலான நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முதன்மையானப் பிரச்னையாக குடிநீர் தேவையும், கழிவுநீர் அகற்றமும் இதன் மூலம் ஓரளவிற்கு தீர்வைக் காண வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: நிலத்தடி நீரை உறிஞ்ச தயாராகும் சென்னை குடிநீர் வாரியம்!

ABOUT THE AUTHOR

...view details