தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி - schools

private school fees
private school fees

By

Published : Jul 7, 2021, 2:22 PM IST

Updated : Jul 7, 2021, 5:14 PM IST

14:17 July 07

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன்னர் 40 சதவீத கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்றும் 35 சதவீத கட்டணங்களை பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் வசூல் செய்து கொள்ளலாம், மீதமுள்ள 25 சதவீத கட்டண வசூல் செய்வது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கடிதம்

சென்னை : தனியார் பள்ளிகளில் முதல் தவணையில் 40 சதவீதமும், 2ஆம் தவணையில் 35 சதவீதம் என 75 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக 2021 ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் முடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2021-22ஆம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன எனப் புகார்கள் வருகின்றன. 
தற்போது நிலவி வரும் கரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும்.

முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்யலாம். மீதமுள்ள 25 சதவீதம் கட்டணங்களை வசூல் செய்வது குறித்து கரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தொழிற்கல்விபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை!

Last Updated : Jul 7, 2021, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details