ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு தனியார் நிறுவனங்கள் உதவ வேண்டும்
சென்னை: ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கும் உணவு கிடைக்க தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு தனியார் நிறுவனங்கள் உதவ வேண்டும்
கரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 9 லட்சம் ரூபாயை விடுவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
Last Updated : Jun 4, 2021, 1:14 PM IST