தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யக் கூடாது: கல்வி இயக்குநரகம்! - private college admisssions

தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை வழங்கக் கூடாது எனவும், மாணவர்களை கல்லூரி வளாகத்தில் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், 20ஆம் தேதி முதல் இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

private college admisssions
private college admisssions

By

Published : Jul 17, 2020, 4:55 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 16) வெளியாகின. அதனைத்தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இச்சூழலில் இன்று(ஜூலை 17) காலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி சுந்தரராஜன் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரிடம் கேட்டபோது, 'தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரியில் விண்ணப்பம் வாங்க வந்த மாணவர்கள்

ஜூலை 20ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்கள் அளிக்கலாம். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டமாக சேர்வதைத் தவிர்க்க வேண்டும்; சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணிபுரிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகம் செய்யக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details