அரசு அறிவுறுத்தியுள்ள தூய்மை நடவடிக்கைகள், தகுந்த இடைவெளி உள்ளிட்ட நிலையான இயக்க விதிமுறைகளை உரிய வகையில் பின்பற்றி, அரசுப் பேருந்துகள் போல அனைத்து நடைமுறைகளையும் கடைபிடித்து இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இப்பேருந்துகள் அரசு வரையறுத்துள்ள மண்டலங்களுக்குள் மட்டுமே இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் மண்டலங்களுக்குள் தனியார் பேருந்து சேவை! - தனியார் பேருந்துகள்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 10) முதல் மண்டலங்களுக்குள் தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஆம்னி பேருந்துகள் நாளை இயக்கத்தை தொடங்காது என அறிவித்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், செயல்படாத நாட்களுக்கு செலுத்திய வரியை ரத்து செய்ய வேண்டும், கூடுதல் பயணிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இக்கோரிக்கைகளை அரசு பரிசீலித்தால் மட்டுமே, அடுத்தக்கட்டமாக பேருந்துகள் இயக்கம் குறித்து அறிவிக்க முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அஃப்சல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனை காலி படுக்கை விவரம்: இணையத்தில் பதிவேற்ற உத்தரவு!