கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் தற்போது பாதுகாப்பாக முகக் கவசம் அணிந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகக் கவசங்களின் தேவையும், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 30 ஆயிரம் முகக் கவசங்களை தயாரிக்கும் சிறைக்கைதிகள் - கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முகக் கவசம்
சென்னை: தமிநாட்டிலுள்ள சிறைகளில் ஒரே நாளில் 30 ஆயிரம் முகக் கவசங்களை சிறைக்கைதிகள் தயாரிக்கின்றனர்.
இதனையடுத்து தையல் பயிற்சி பெற்ற தமிழக சிறையில் உள்ள சுமார் 200 தண்டனை கைதிகள் மூலம் முகக் கவசங்களை தாயரிக்கும் பணியில் சிறைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி ஒரே நாளில் 30 ஆயிரம் முகக் கவசங்களை சிறைக்கைதிகள் மூலம் தாயரிக்க தொடங்கி உள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் முகக் கவசங்களை தயாரித்துள்ளனர். தமிழ்நாட்டு சிறைகளிலுள்ள காவலர்கள், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவலர்கள், சிறைக்கைதிகள் அனைவரும் சிறையில் தயரிக்கப்படும் இந்த முகக் கவசங்களை பயன்படுத்துகின்றனர்.
TAGGED:
Prisoners mask corona