தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

40 ஒன்றியங்களில் பணியாற்றினால் ஆசிரியர் கலாந்தாய்வில் முன்னுரிமை - ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிகளவில் காலியாக உள்ள இடங்களில் 40 ஒன்றியங்களில் பணியாற்றினால் ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது 3 ஆண்டுகள் கழித்து முன்னுரிமை அளிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Teachers
Teachers

By

Published : Jan 23, 2022, 4:34 PM IST

Updated : Jan 23, 2022, 7:30 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிகளவில் காலியாக உள்ள இடங்களில் 40 ஒன்றியங்களில் பணியாற்றினால் ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது 3 ஆண்டுகள் கழித்து முன்னுரிமை அளிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 413 கல்வி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றிய அளவில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனங்கள் நடைபெறுகின்றன.

பெரும்பாலன இடங்களில் ஆசிரியர்கள் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு செல்லாமல் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் அந்த ஒன்றியங்களில் ஆசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே இருப்பதால், மாணவர்களின் கற்றல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

அதன் படி ஆசிரியர் பணியிடங்கள் காலி அதிகம் உள்ள 16 மாவட்டங்களில் ஒன்றியங்களின் பெயரை அறிவித்துள்ளது. இந்த ஒன்றியங்களில் பணியாற்றினால் 3 ஆண்டிற்கு பின்னர் நடைபெறும் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் இடத்திற்கு செல்ல முடியும்.

குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வட மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தென் மாவட்டத்திற்கு செல்வதற்கு உதவியாக அமையும்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கீழையூர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், விழுப்புரம் மாவட்டம் காணை, மேல்மலையனூர், முகையூர், திருவெண்ணெய்நல்லூர், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, திருவண்ணாமலை மாவட்டம் போளுர், ஆரணி, செங்கம், தண்டராம்பட்டு, ஜவ்வாதுமலை, வெம்பாக்கம், கலசப்பாக்கம், செய்யாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, சூளகிரி, கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, பருகூர், மத்தூர், ஊத்தரங்கரை, தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு, திருவள்ளுர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, கடலூர் மாவட்டம் நல்லூர், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த ஒன்றியங்களுக்கு பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் பணியாற்றினால் 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்கு பின்னர் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அது 'இல்லம் தேடிக் கல்வி'; இது 'வீடு வழிக்கல்வி' - மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்!

Last Updated : Jan 23, 2022, 7:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details