காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையேயான சந்திப்பு இன்று நிகழவுள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தை சென்றடைந்தார்.
கோவளம் வந்தடைந்தார் நரேந்திர மோடி! - PM Modi Xi Jinping Summit
சென்னை: பிரதமர் மோடி சாலை மார்க்கமாக திருவிடந்தையிலிருந்து கோவளம் சென்றடைந்தார்.
![கோவளம் வந்தடைந்தார் நரேந்திர மோடி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4717336-620-4717336-1570776640155.jpg)
Modi
அங்கு அவரை தமிழ்நாடு அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் கோவளம் புறப்பட்ட அவர், சற்று நேரத்துக்கு முன் கோவளம் சென்றடைந்தார்.
அங்குள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள நரேந்திர மோடி இன்று மாலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்.