தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாமதமாக முடிந்த ஆலோசனை - கிளம்பிய தலைவர்கள்! - PM Modi Xi Jinping Summit

இரண்டு மணி நேரம் நீடித்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்திலிருந்து கிளம்பினர்.

mamallapuram latest

By

Published : Oct 11, 2019, 10:04 PM IST

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே ஆலோசனைக் கூட்டம் முதலில் ஒரு மணி நேரம் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டு மணி நேரம் நீடித்த ஆலோசனைக் கூட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்தது.

ஆலோசனை முடிவடைந்ததையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது அதிநவீன ஹாங்கி எல். 5 பாதுகாப்பு கார் மூலம் சென்னை கிண்டி ஐடிசி சோழா விடுதிக்குத் திரும்பினார். அவரை கார் வரை சென்று வழியனுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி.

சீன அதிபரை வழியனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடியும், தற்போது கோவளத்திலுள்ள நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டார்.

இதையும் படிக்கலாமே: ஏழு முறை கைக்குலுக்கிய மோடி - ஜி ஜின்பிங்!

ABOUT THE AUTHOR

...view details