சென்னை: குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமரன். இவர் அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் சாமியாராக உள்ளார். இவர் 15 வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை மறைக்க குமரனின் தாய், தந்தை, அண்ணன் ஆகிய குடும்பத்தார் 15 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் தனியாக வசித்து வந்தனர். ஆனால் குமரன் தொடர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் குமரன் வேறொரு திருமணம் செய்து கொண்டார். அக்காவின் வாழ்க்கையை எண்ணி கடந்த 5 ஆண்டுகளாக அமைதி காத்த சிறுமி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதாரத்துடன் பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.