தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆயுத பூஜை: வரத்து குறைவு காரணமாக பூ விலை கடும் உயர்வு - வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை கடும் உயர்வு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு பூவின் தேவை அதிகரித்துள்ளதாலும் வரத்து குறைந்துள்ளதாலும் பூவின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

Market
Market

By

Published : Oct 24, 2020, 10:56 PM IST

ஆயுத பூஜையை முன்னிட்டு மக்கள் வழிபாட்டுக்காக அதிக பூவை வாங்குவர். இதனால் பூவின் விலை சற்று அதிகரிப்பது வாடிக்கை. இந்த முறை சென்னை வானகரம் மொத்த மலர் சந்தைக்கு பூவின் வரத்து பாதியாக குறைந்ததன் காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னை சந்தையில் பூவின் விலை குறைவாக இருந்ததன் காரணமாக விவசாயிகள் உள்ளூர் சந்தைகளில் பூவை விற்பனை செய்ததால் வரத்து பாதியாக குறைந்ததாக மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.

வானகரம் மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லைப்பூ 600 ரூபாய் வரையும், ஜாதிமல்லி 360 ரூபாய் வரையும், சாமந்தி 120 முதல் 140 வரையும், ரோஸ் 160 முதல் 220 வரையும், சம்பங்கி 240 வரையும், அரளி 300 ரூபாய் வரையும், செண்டுமல்லி 50 முதல் 80 ரூபாய் வரையும், கோழிக்கொண்டை 80 முதல் 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.

அதிகாலையில் பூவின் விலை குறைவாக இருந்ததாக கூறும் கோயம்பேடு சந்தை மலர் வணிகர் சங்கத் தலைவர் மூக்கையா, பின்னர் வரத்துக் குறைவு காரணமாகவும், தேவையைப் பூர்த்திசெய்ய முடியாததாலும் நண்பகல் வேளையில் பூவின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மழை காரணமாக ஏராளமான பூ சேதமடைந்ததாலும் பூவின் விலை உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். ஏராளமான பூ அழுகி வீணானதால் விவசாயிகளும் வணிகர்களும் பாதிப்படைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details