சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி மாதம் அவசரமாகப் பெருங்குடி, வளசரவாக்கம் சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைக்க சுமார் ரூ.43 கோடி மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
கடந்த ஆட்சியின் 660 நகர சாலை ஒப்பந்தங்கள் ரத்து - 660 city road contracts
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அவசரமாக இறுதி செய்யப்பட்ட 660 நகர சாலை ஒப்பந்தங்களைச் சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சி
இந்தக் குழு அளித்த அறிக்கையில், சாலைகள் அனைத்தும் சீரான நிலையில் இருப்பதாகவும் , அவற்றைச் சீரமைப்பதற்கான தேவை தற்போது இல்லை எனவும் குறிப்பிடப்பட்டது. அதன்காரணமாக, இந்த 660 ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சொத்து, தொழில் வரிகளை வசூலிக்க சென்னை மாநகராட்சித் தீவிரம்