சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். அதன்படி, இன்று (ஆக. 2) காலை தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தார்.
அவரை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். அதையடுத்து அவர் ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார்.