குடியரசுத் தலைவர் 3 நாள்கள் பயணமாக தமிழ்நாடு வருகை - President Ramnath Govind arrives in Tamil Nadu on a three-day visit
சென்னை: குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டிற்கு மூன்று நாள்கள் பயணமாக இன்றிரவு (மார்ச் 9) டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முக்கிய அலுவலர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துவிட்டு காரில், சென்னை ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையம்
இதையடுத்து நாளை (மார்ச் 10) காலை ஆளுநர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூா் புறப்பட்டுச் செல்கிறாா்.
அங்கு பொற்கோவிலுக்குச் சென்று, அதன்பிறகு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் கலந்துகொள்கிறாா். பின்பு மாலையில் வேலூரிலிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்து காரில் ஆளுநர் மாளிகை செல்கிறாா்.
11ஆம் தேதி அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு, அதன்பிறகு அன்று பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறாா். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்புப் படை அலுவலர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 11ஆம் தேதி மாலைவரை இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனா்.
Last Updated : Mar 10, 2021, 12:11 PM IST