தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயர் நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

சென்னை : உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவின் (கொலீஜியம் குழு) பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார்.

President approves appointment of 10 new judges to the Madras High Court
உயர் நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

By

Published : Dec 1, 2020, 8:09 PM IST

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 5 உறுப்பினர்கள் கொண்ட நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம் குழு), கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்தது.

இதனையடுத்து, கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்நில் நீதிபதிகளாக பதவி வகித்துவந்த 1. கண்ணம்மாள் சண்முகசுந்தரம், 2. சத்திகுமார் சுகுமார குருப், 3. முரளி சங்கர் குப்புராஜீ, 4. மஞ்சுளா ராமராஜு நல்லையா, 5. தமிழ்ச்செல்வி, 6. சந்திரசேகரன், 7. நக்கீரன், 8. சிவஞானம் வீராசாமி, 9. இளங்கோவன் கணேசன், 10. ஆனந்தி சுப்ரமணியன் ஆகிய 10 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் வழங்கினார்.

இந்தத் தகவல் உச்சநீதிமன்றத்தின்அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டது. கொலீஜியம் குழுவில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எஃப்.நாரிமன், யு.யு.லலித் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

உயர் நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

உயர் நீதிமன்றத்துக்கு மொத்தம் 75 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். தற்போது உயர்நீதிமன்றத்தில் 53 பேர் நீதிபதிகளாக உள்ள நிலையில், இவர்கள் 10 பேரை நியமிக்கப்பட்டதன் மூலம், தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ள நீதிபதிகள் முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன், மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பிஎட் படிப்பிற்கு டிசம்பர் 4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் அன்பழகன் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details