சென்னை மாநிலக் கல்லூரி, கல்லூரி திறப்புக் குறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி செப்டம்பர் 1 முதல் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.சி.ஏ மற்றும் எம்.சி.ஏ ஆகிய பாடப்பிரிவு மாணவர்களில் 2ஆம் ஆண்டு மாணவர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், 3ஆம் ஆண்டு மாணவர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக் கிழமைகளிலும் கல்லூரிக்கு வர வேண்டும்.
எம்.ஏ., எம்.எஸ்சி மற்றும் எம்.காம் ஆகிய முதுநிலை பாடப்பிரிவு மாணவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களும் வர வேண்டும்.
அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கல்லூரி நேரடி வகுப்புகள் நடைபெறும்.