சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொண்டு பல்லாவரத்தைச் சேர்ந்த பிரேமா என்ற பெண் அவரது நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமா பேசினார். அப்போது, "நான் மைசூரில் பிறந்தேன். சென்னையில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். ஜெயலலிதாவின் மகள் நான் தான் என்பதை நேரம் வரும்போது ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொள்ளும் பிரேமா இன்னும் 4 முதல் 5 நாட்களில் சசிகலாவை சந்திக்கவுள்ளேன். என்னை வளர்த்த பெற்றோர் உயிரிழந்துவிட்டனர். என்னை பேபி என்று செல்லமாக ஜெயலலிதா அழைப்பார். அப்போலோ மருத்துவமனையில் அம்மா அனுமதிக்கப்பட்ட போது பின் வாசல் வழியாக சென்று அவரை சந்தித்தேன்.
பிரேமா செய்தியாளர் சந்திப்பு ஜெயலலிதாவின் உதவியாளர் முத்துசாமி என்பவர் என்னை அழைத்தார். அப்போது ஜெயலலிதா எனக்கு முத்தம் கொடுத்தார். ஒரு முறை போயஸ் கார்டன் இல்லத்திலும் ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன்" எனறு தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோடநாடு கொலை வழக்கு விசாரணை நீட்டிப்பு