தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரசவ வலியால் துடித்த பெண் - உடனடியாக உதவிய காவலர்கள்! - கர்ப்பிணி பெண்

சென்னை: ஊரடங்கு நேரத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காவலர்கள் தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman
woman

By

Published : May 26, 2020, 8:18 PM IST

சென்னை ஆதம்பாக்கம் ராம் நகரில் வசித்து வருபவர்கள் ஹரீஷ் மற்றும் சியாமளா. முழு மாத கர்ப்பிணியான சியாமளாவிற்கு நேற்று (மே 25) இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால், போக்குவரத்து வசதி ஏதுமின்றி சியாமளாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் தவித்துள்ளனர். சியாமளாவின் கணவர் ஹரீஷ் தெரு முழுவதும் வாகனம் ஏதும் கிடைக்குமா எனத் தேடி சுற்றித் திரிந்துள்ளார்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் மற்றும் ஓட்டுநர், பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த சியாமளாவை உடனே மீட்டு, ரோந்து வாகனத்திலேயே பழவந்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

பிரசவ வலியால் துடித்த பெண் - உடனடியாக உதவிய காவலர்கள்!

அங்கு சியாமளாவிற்கு நலமுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. உரிய நேரத்தில் உடனடியாக உதவிபுரிந்து, மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்றிய ஆதம்பாக்கம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் மற்றும் ஓட்டுநருக்கு சியாமளாவின் கணவர் ஹரிஷ் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாகன விபத்து: காரின் மேல் பயணம் செய்த தூக்கிவீசப்பட்ட இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details