சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அறிவியல் பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வை எழுத வேண்டியது கட்டாயமாக உள்ளது.
நேரம் குறைப்பு:அதன் அடிப்படையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செய்முறை தேர்விற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் செய்முறை தேர்வு நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக, திறக்கப்படாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கியது. பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் போது அவர்களுக்கான பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வு எழுதுவதற்கான பயிற்சியும் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
போதுமான பயிற்சி : சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான செய்முறை தேர்வினை ஆர்வமுடன் எழுதினர். செய்முறை தேர்வு குறித்து முதுகலை ஆசிரியர் மணிமாறன், "அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டன.