தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தென்சென்னையில் களமிறங்கும் பவர் ஸ்டார்... பரபரப்பில் அரசியல் களம் - பவர் ஸ்டார் சீனிவாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக தன்னை பாவித்துக்கொண்டு தமிழ் திரையுலகில் தன்னை விளம்பரப்படுத்தி நுழைந்த நடிகர் பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசன் அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைக்க நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னையில் களமிறங்குகிறார். அதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

star

By

Published : Mar 20, 2019, 8:35 AM IST

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிட இருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் தனக்கு போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிதான், ரஜினியைவிட அதிக ரசிகர்கள் தனக்கு இருக்கிறார்கள் என கூறிய பவர் ஸ்டார் சீனிவாசன் மக்களவைத் தேர்தலையொட்டி தென்சென்னை தொகுதியில் போட்டியிட இருக்கிறார். மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் அகில இந்திய குடியரசு கட்சி சார்பில் அவர் களமிறங்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நுழைந்து மற்ற நடிகர்களுக்கு நெருக்கடி கொடுத்ததுபோல் தென்சென்னை தொகுதியில் களமிறங்கும் பவர் ஸ்டார் மற்ற வேட்பாளர்களை கதிகலங்க வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், சூப்பர் ஸ்டார் போலில்லை இந்த பவர் ஸ்டார்! சொன்னா சொன்ன நேரத்துல அரசியலுக்கு வந்துவிடுவார் எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details