இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நாளை (ஜூலை.13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் தரப்படும்.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பவர் கட்! - Chennai district news
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மாநகரின் சில முக்கியப் பகுதிகளில் நாளையும் நாளை மறுநாளும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எழும்பூர் பகுதிகளான, சைடனாமஸ் ரோடு ஒரு பகுதி, பிடி முதலி தெரு, நாவல் மருத்துவமனை ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஒரு பகுதி, வேப்பேரி நெடுஞ்சாலை, ஜெனரல் காலின்ஸ் ரோடு, குறவன்குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம், ஹன்டர்ஸ் ரோடு ஒரு பகுதி, ஆரணி முத்து தெரு, மாணிக்கம் தெரு பகுதி, கேசவபிள்ளை பார்க் ஹவுசிங் போர்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
இதேபோன்று நாளை மறுநாள் (ஜூலை.14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதுரவாயல் பகுதிகளான பி.எச் ரோடு பகுதி, கார்த்திகேயன் நகர், பல்லவன் நகர், மேட்டுக்குப்பம் மெயின் ரோடு, வேல் நகர், ஸ்ரீ லட்சுமி நகர், கண்ணியம்மன் நகர், அய்யப்பா நகர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் மின்விநியோகம் தரப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.