தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் மின் விநியோகம் நிறுத்தம்: தேதிகள் அறிவிப்பு - மின்சாரம் துண்டிப்பு

சென்னையில் நாளை (மார்ச் 30), நாளை மறுநாள் (மார்ச் 31) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் மின் விநியோகம் நிறுத்தம்: தேதிகள் அறிவிப்பு
சென்னையில் மின் விநியோகம் நிறுத்தம்: தேதிகள் அறிவிப்பு

By

Published : Mar 29, 2022, 8:04 PM IST

சென்னையில் நாளை (மார்ச் 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, வியாசர்பாடி-மாத்தூர், சிறுச்சேரி துணைமின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். நாளை மறுநாள்(மார்ச் 31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தாம்பரம், அண்ணாநகர்-காரம்பாக்கம், செங்குன்றம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

வியாசர்பாடி-மாத்தூர்: பெரிய மாத்தூர், மாத்தூர் எம்.எம்.ட்.ஏ. பார்வதிபுரம், வெற்றி நகர், மஞ்சம்பாக்கம்

சிறுச்சேர்: படுர், வனியன்சாவடி, ஒ.எம்.ஆர். ரோடு, ஜே.ஜே நகர், சிப்காட்

நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

தாம்பரம்: கடப்பேரி எஸ்.பி.ஐ காலனி, கஜலட்சுமி நகர், கஜபதி நகர், கமலா தெரு, எம்.ஜி.ஆர் நகர், என்.எஸ்.ஆர் சாலை, மாடம்பாக்கம் கிழக்கு, மேற்கு வடக்கு மாட தெரு, மாருதி நகர், ராஜம்பாள் காலனி, சந்திரபோஸ் நகர், எஸ்.ஆர். காலனி பள்ளிக்கரணை இராம் நகர், 200 அடி ரேடியல் சாலை, பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, வேளச்சேரி பிரதான சாலை

அண்ணாநகர்-காரம்பாக்கம்: செட்டியார் அகரம் பிரதான சாலை, மீன் அங்காடி சாலை, இந்திரா நகர், பழனியப்பா நகர், நீலகண்டமுதலி தெரு, போரூர் கார்டன் பேஸ் 1, ராமசாமி நகர், பிள்ளையார் கோவில் தெரு

செங்குன்றம்/புழல்: மொண்டியம்மன் நகர், இந்திராகாந்தி சாலை, ஜி.என்.டி சாலை, புது நகர், காமராஜர் நகர், வண்டி மேடு, பஜனைகோவில் தெரு, புழல் சிறை சாலை குடியிருப்பு பகுதிகள்

வியாசர்பாடி: சி.எம்.பிடி டிரக் டெரிமினல், ராஜாஜி தெரு, சீனிவாசா நகர், எம்.ஆர்.எச் ரோடு, ஜி.என்.டி.ரோடு, வடபெரும்பாக்கம், நேதாஜி தெரு, முனுசாமி நகர் மாதவரம் ஜி.என்.டி சாலை, ஐய்யப்பா நகர், தேவகி நகர், ராஜாஜி சாலை

அடையாறு: தெற்கு லாக் தெரு, குருவப்பன் தெரு, நாயுடு தெரு, கருணாநிதி 1 மற்றும் 2ஆவது தெரு

மின் விநியோகம் நிறுத்தப்படும் இந்த இரண்டு நாள்களில் பிற்பகல் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ் புத்தாண்டையொட்டி தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!'

ABOUT THE AUTHOR

...view details