தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் முக்கிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தம்! - Press release
சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நாளை (செப் 17) நிறுத்தப்படும்.
சென்னையில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதியன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்தப் பகுதிகள், பெசன்ட் நகர் பகுதி : எல்லையம்மன் கோயில் தெரு, தாமோதரபுரம் (1 முதல் 4வது மெயின் ரோடு), அடையார் பகுதி: 7,8,9,11,12,13,14வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர், 1 வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.