தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிவர் புயல்: குரூப்-4 கலந்தாய்வு ஒத்திவைப்பு! - postponement tnpsc group-4 counselling

சென்னை: நிவர் புயல் காரணமாக குரூப்-4 ல் தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

tnpsc-group-4
tnpsc-group-4

By

Published : Nov 24, 2020, 3:51 PM IST

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குருப்-4 தேர்வில் 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான தட்டச்சர் பதவிக்கு கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நவ.25, 26ஆம் தேதி நடைபெறவிருந்த மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details