வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது வரும் 25ஆம் தேதி மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த ஏழு மாவட்டங்களில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் பாதிப்பு இருக்கும் நாள்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கும், நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.