தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ, பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள், அயோத்தி தீர்ப்பை கண்டித்து டிசம்பர் 6ஆம் தேதி போரட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலத்திலும் இதுவரை எந்த போராட்டமோ, ஆர்பாட்டங்களோ நடத்தப்படவில்லை.
இந்நிலையில் அயோத்தி தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த இருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இஸ்லாமிய அமைப்புகள் நடத்த உள்ள இந்த போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான கோபிநாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.