விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பிரபு என்கிற ராஜேந்திரன் ஆஸ்திரேலியாவில் இரிடியத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, 133 பேரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டார். அதனடிப்படையில், விருதுநகர் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த ஜாமீன் மனுக்கு எதிராக பல்லாவரத்தை சேர்ந்த முகமது தமீம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரன் என்னிடம் கூறுகையில், இரிடியத்தை ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்துள்ளேன். அதற்காக தனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது. அந்த பணத்தை பெறுவதற்கு ரிசர்வ் வங்கி மூலமாக சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.