இது குறித்து பேசிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட், ”ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கான பேருந்து வசதியும், அதற்கான அறிவிப்பும் முறையாக இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அறிவித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், தேர்வு எழுத அனுமதிப்பது, பாதிக்கப்பட்ட மாணவரை மட்டுமல்லாது, தேர்வு எழுத வரும் பாதிக்கப்படாத மாணவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவதாகும்.
மாணவர்கள் எந்த கிராமங்களில், பகுதியில் உள்ளனர் என்ற விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாக உள்ளது.