80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்களிக்கும் வசதிக்கான, படிவம் 12 (டி)யை, இன்று வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சென்னை மாநகராட்சியில் 80 வயதிற்கு மேல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர், மாற்றுத்திறனாளிகள் 10 ஆயிரம் பேர் என 1 லட்சத்து 50 ஆயிரம் பேரும், தபால் வாக்கு செலுத்துவதற்கான, 12 (டி) படிவங்களை தயார் செய்துள்ளோம்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் அந்தப்பகுதியில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்வார். பின்னர், குறிப்பிட்ட நாளில் வீடியோ, ஃபோட்டோ கிராபர்களை அழைத்து வந்து, தபால் வாக்குகள் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.