இதன்படி, சென்னை வட்டாரத் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பாதுகாப்புப் படையினருக்கு, பிரத்யேக அஞ்சல் வங்கிச் சேவைகளை வழங்க சிறப்பு வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகங்களில் பாதுகாப்புப் படையினருக்குச் சிறப்பு வரிசை - Postal department
சென்னை: அஞ்சல் வங்கி நடவடிக்கைகளுக்காக முக்கிய ராணுவத் தளங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் பாதுகாப்புப் படையினருக்குச் சிறப்பு வரிசை வசதியை ஏற்படுத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
இந்தச் சிறப்பு வரிசை நேற்று முன்தினம் (ஜன. 28) முதல் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்புப் படையினர் பண பரிமாற்றத்தைச் சுமுகமாக மேற்கொள்ள தேவையான வசதியை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வசதியை சம்பந்தப்பட்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுப் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை வட்டாரத் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அஞ்சல் அலுவலர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதிப்பிழப்பு கரன்சிகளைப் பயன்படுத்தி மால்கள் வாங்கிய சசிகலா வழக்கு: வருமானவரித் துறை வாதம்!