சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்கள், நகராட்சிகளில் உள்ள 247 அம்மா உணவகங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 4 அம்மா உணவகங்கள் என மொத்தம் 658 அம்மா உணவகங்களில் இலவசமாக அரசு உணவளித்து வந்தது. இவை மூலம் கட்டடத் தொழிலாளர்கள், தினக் கூலிக்கு வேலை செய்பவர்கள் என பல்வேறு தரப்பினரரும், ஊரடங்கு நேரத்தில் இலவசமாக உணவை உண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் மூன்றாவது முறை ஊரடங்கு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நிபந்தனைகளுடன் சிறிய அளவு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் இவ்வளவு நாட்களாக இலவசமாக உணவளித்து வந்த அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். இது ஏழை எளிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.