சென்னை:மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷென்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் பாகம்-1" திரைப்படம் செப்.30ஆம் தேதி அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் செப்.6ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டின் மூத்த நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாத்த முன்னிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் “பொன்னியின் செல்வன் பாகம்-1" திரைப்படத்தின் பாடல்களை தனது இசைக்குழுவோடு சேர்த்து அரங்கேற்றவுள்ளார்.
இவர்களோடு இணைந்து திரையுலகின் மூத்த கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகிஸ்தர்கள், படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:வெற்றிமாறன் பிறந்த நாள் அப்டேட்... 2 பாகங்களாக வெளியாகும் விடுதலை...