இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம் என பல முன்னணி நடித்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 'கல்கி' எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் டீஸர் சில நாள்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதனை தொடர்ந்து வெளியான 'பொன்னி நதி' பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.