ராமநாதபுரத்தில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிக்கு நேற்று 31 நபர்கள் லேப்டாப்புடன் நுழைந்ததால், திமுக தரப்பு பதறிப்போனது. லேப்டாப்புடன் வந்தது கல்லூரி பேராசிரியர்கள் என்றும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த வந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திமுக தரப்பு புகாரளிக்க, ஆசிரியர்களை வேறு இடத்தில் இருந்து ஆன்லைன் வகுப்பு எடுக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார்.
வாக்கு எந்திரங்கள் இருக்கும் மையங்களுக்கு லேப்டாப்புடன் நுழைந்த நபர்கள் - பதறும் திமுக - evm centre
12:23 April 16
சென்னை: வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என திமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தேர்தல் ஆணையத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை குறைகிறது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நெய்வேலி, பன்ருட்டி தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள அண்ண பல்கலை வளாகத்தில் மூவர் லேப்டாப்புடன் வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆன்லைன் வகுப்புகளை வீட்டில் இருந்தே எடுக்கும் வசதி இருக்கும்போது, ஆசிரியர்கள் ஏன் இங்கு வர வேண்டும் என திமுக தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி தொகுதி வாக்கு எந்திர மையங்களுக்கு கண்டெய்னர் லாரிகள் வந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்களால் பதற்ற சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என அதிருப்தி தெரிவித்த திமுக, தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைகிறது என கூறியுள்ளது.