சென்னை கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடக் குறைவாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். இருப்பினும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்தைவிட மிகவும் குறைவான அளவு மக்களே காணப்படுகின்றனர்.
பொங்கல் பண்டிகை வாரத்தின் மத்தியில் வருவதால் பலரும், வெள்ளிக்கிழமை முதலே ஊருக்குச் செல்ல தொடங்கியுள்ளதாலும், வெவ்வேறு பகுதிக்குச் செல்வதற்காக தாம்பரம், தாம்பரம் சானிடோரியம், மாதவரம், கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்து பேருந்து நிலையம், கோயம்பேடு, பூந்தமல்லி ஆகிய ஆறு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதாலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.