தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்! விநியோகிக்கும் பணி தொடக்கம்! - பொங்கல் பரிசுத்தொகுப்பு

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.

price
price

By

Published : Dec 26, 2020, 3:05 PM IST

பொங்கல் திருநாளுக்காக தமிழகத்திலுள்ள 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் தொடங்கி வைத்தார். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் என தினமும் 200 பேருக்கு மிகாமல் டோக்கன் வழங்கவும், பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை இன்று முதல் 30 ஆம் தேதிக்குள் வீடு தேடிச் சென்று வழங்க வேண்டும் எனவும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, ரூ.2,500 தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. ஜனவரி 4 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்போது, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணிக்கு முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details