தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி , 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளக் கரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கமாக ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த பரிசானது ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு 13 ஆம் தேதியும் வழங்கப்பட்டது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை பெறாதவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை 21 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.