சென்னை: தமிழ்நாட்டில் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ரூ.1,160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பணிகளை காண்காணிக்கவும், முறைபடுத்தவும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர்கள், வேளாண்மை இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை, கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளது.
ரேஷன் அட்டைக்கு ரூ.1,000
இதனிடையே, பொங்கலில் ரேஷன் அட்டைக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சியில் பொங்கலின் போது 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. இதோபோல வரும் பொங்கலிலும் வழங்க வேண்டும் கோரிக்கைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000
அதேபோல், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றத் திட்டத்தின் முக்கிய அறிவிப்பு பொங்கலில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகிவருகின்றன. அத்துடன் தற்போதுள்ள நிதி பற்றாக்குறையில், இந்தத் திட்டம் மூலம் 1000 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை வீடுகளில் வசிப்போர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் மட்டுமே இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:குடும்பத்தலைவிக்கு ரூ.1,000.. முக்கிய அறிவிப்பு...