சென்னை: தமிழ்நாட்டில் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதற்காக ரூ.1,160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பணிகளை காண்காணிக்கவும், முறைபடுத்தவும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர்கள், வேளாண்மை இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு விநியோகம் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை, கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, ஆவின் நெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளது.